பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகம் வருகை


பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் தமிழகம் வருகை
x

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது

கோயம்புத்தூர்

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சட்டசபை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் பாமக இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் இன்றும் தமிழகம் வருகை தந்துள்ளார். கோவை விமான நிலையம் வந்த அவரை தமிழக பாஜக தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்றப்பின் நிதின் நபின் தமிழகம் வருவது இது 2வது முறையாகும்.

கோவையில் நாளை நடைபெறும் பாஜக மாநில மையக்குழு கூட்டத்தில் நிதின் நபின் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தில் தமிழக அரசியல் சூழல், சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது, வேட்பாளர் தேர்வு, கட்சி வளர்ச்சிப்பணிகள், கூட்டணி உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.

1 More update

Next Story