திருப்பூர் வழியாக இன்று முதல் அம்ரித் பாரத் ரெயில் சேவை

திருப்பூருக்கு இன்று இரவு 8.25 மணிக்கு வந்து 8.30 மணிக்கு புறப்படும்.
திருப்பூர்,
நாடு முழுவதும் ரெயில் சேவையை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு அம்ரித் பாரத் ரெயில்களை இயக்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஐதராபாத்தில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக கேரளா மாநிலம் திருவனந்தபுரம் வடக்கு வரை அம்ரித் பாரத் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.
திருவனந்தபுரம் வடக்கு-சார்லப்பள்ளி (வண்டி எண்.06308) அம்ரித் பாரத் சிறப்பு ரெயில் திருவனந்தபுரம் வடக்கில் இன்று காலை 10.45 மணிக்கு கொடியசைத்து தொடங்கி வைக்கப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் மாலை 4.30 மணிக்கு சார்லப்பள்ளியை சென்றடைகிறது. திருப்பூருக்கு இன்று இரவு 8.25 மணிக்கு வந்து 8.30 மணிக்கு புறப்படும்.
மேற்கண்ட தகவலை ரெயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






