நெல்லையில் மது விற்ற 7 பேர் கைது: 479 பாட்டில்கள், பணம் பறிமுதல்


நெல்லையில் மது விற்ற 7 பேர் கைது: 479 பாட்டில்கள், பணம் பறிமுதல்
x

நெல்லை மாநகரில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி, மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

திருநெல்வேலி

திருநெல்வேலி மாநகர பகுதிகளில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மாநகர போலீஸ் கமிஷனர் மணிவண்ணன் உத்தரவின்படி, மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் மாநகர பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 479 மதுபாட்டில்கள், மதுவிற்ற பணம் ரூ.6,650 மற்றும் மதுவிற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் திருநெல்வேலி மாநகர பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பொது இடங்களில் மது அருந்திய 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story