நெல்லையில் 4.5 கிலோ கஞ்சா, பைக் பறிமுதல்: 3 பேர் கைது

திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம், குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாநகரம் மேலப்பாளையம், குறிச்சி வாய்க்கால் பாலம் அருகில் நேற்று காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபர்களில் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பீர் முஹம்மது என்பவர் தப்பி ஓடிவிட, மற்ற நபர்களை போலீசார் சோதனை செய்தனர்.
அதில் அவர்கள் திருநெல்வேலி, மேலப்பாளையத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் ராசப்பன், பஷீர் மகன் முஹம்மது ஹுசைன் மற்றும் அக்பர் அலி மகன் முஹம்மது பாதுஷா என்பதும், அவர்களிடமிருந்து சுமார் 4.5 கிலோ கிராம் கஞ்சா மற்றும் ஒரு இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Related Tags :
Next Story






