தமிழகத்தில் 22 லட்சம் பேருக்கு பட்டா; சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்


தமிழகத்தில் 22 லட்சம் பேருக்கு பட்டா; சட்டசபையில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்
x
தினத்தந்தி 22 Jan 2026 11:47 AM IST (Updated: 22 Jan 2026 11:58 AM IST)
t-max-icont-min-icon

எலவம்பட்டி, மதுரா மைக்காடு மற்றும் ஜெகன்நாதன் வட்டம் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்குவது பற்றி எம்.எல்.ஏ. நல்லதம்பி சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.

சென்னை,

தமிழக சட்டசபையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது பேசிய, திருப்பத்தூர் சட்டசபை உறுப்பினர் நல்லதம்பி, எலவம்பட்டி, மதுரா மைக்காடு மற்றும் ஜெகன்நாதன் வட்டம் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், இந்த ஆட்சியில் இதுவரை 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கும் பட்டா வழங்குவதற்கான வழிவகைகளை இந்த அரசு ஆராய்ந்து, அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

1 More update

Next Story