சென்னையில் 20 டபுள் டெக்கர் பேருந்துகள்: சிவசங்கர்


சென்னையில் 20 டபுள் டெக்கர் பேருந்துகள்: சிவசங்கர்
x
தினத்தந்தி 11 Jan 2026 3:08 PM IST (Updated: 11 Jan 2026 5:29 PM IST)
t-max-icont-min-icon

சென்னையில் முதற்கட்டமாக 20 டவுள் டெக்கர் பேருந்துகள் கொண்டு வரப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

சென்னை,

ஒரு காலத்தில் சென்னையை கலக்கி வந்த டபுள் டக்கர் பேருந்து மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காக வரவுள்ளது. 1970 ம் ஆண்டுகளில் டபுள் டக்கர் பேருந்துகள் சென்னையின் அடையாளமாகவே பார்க்கப்பட்டது. இந்த பேருந்தானது சென்னையில் தாம்பரத்தில் இருந்து சென்னை ஐகோர்ட்டு வரை இயக்கப்பட்டது. இந்த பேருந்தில் பயணிப்பதற்காகவே அதிகளவில் சுற்றுலா பயணிகள் சென்னைக்கு படையெடுக்க தொடங்கினர். பொதுமக்களின் வரவேற்பு அதிகளவில் இருந்தாலும் பராமரிப்பு செலவு அதிகளவில் இருந்த காரணத்தால் டபுள் டக்கர் பேருந்து கடந்த 2008ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போதைய இளம் தலைமுறைகளை மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஈர்க்கும் வகையில், தமிழக போக்குவரத்து கழகம் பல்வேறு அதிநவீன பேருந்துகளை இயக்கி வருகிறது. அந்த வகையில் மீண்டும் 18 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் டபுள் டக்கர் பேருந்து இயக்கப்படவுள்ளது.

சென்னையில் முதற்கட்டமாக 20 டவுள் டெக்கர் பேருந்துகள் கொண்டு வரப்படும். 20 டபுள் டெக்கர் பேருந்துகளை வாங்குவதற்கு மாநகர போக்குவரத்துகழகம் டெண்டர் விட்டுள்ளது என போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். இந்த மாதம் இறுதியில் சென்னையில் டபுள் டக்கர் பேருந்து தனது பயணத்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story