தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்: பியூஸ் கோயல்


தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்:  பியூஸ் கோயல்
x
தினத்தந்தி 22 Jan 2026 10:27 AM IST (Updated: 22 Jan 2026 12:20 PM IST)
t-max-icont-min-icon

தமிழக நலனுக்காக திமுக அரசு எதுவும் செய்யவில்லை என்று பியூஸ் கோயல் கூறினார்.

சென்னை,

மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் , தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி காலை உணவு விருந்து அளித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் இந்த உணவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி பியூஸ் கோயல் கூறியதாவது: -

எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் காலை உணவு அருந்தினேன். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். தமிழக நலனுக்காக திமுக அரசு எதுவும் செய்யவில்லை. ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை முழுமையாக வீழ்த்தி அதிமுக கூட்டணி ஆட்சிக்கு வரும்.எடப்பாடி பழனிசாமி என்னுடைய நீண்டகால நண்பர்.

தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்திற்கான சிறந்த எதிர்கால வளர்ச்சியை கொண்டு வரும்.நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு உள்ளான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதவி விலக வேண்டும். திமுக ஆட்சியில் பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசிய அளவில் மோடியும் தமிழகத்தில் பழனிசாமியும் தலைவர்களாக இருப்பார்கள்.நாளை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்."என்றார்.

1 More update

Next Story