அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி


அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது; விமானப்போக்குவரத்து மந்திரி
x

அஜித் பவார் உள்பட விமானத்தில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க அம்மாநில துணை முதல்-மந்திரி அஜித் பவார் இன்று சிறிய ரக விமானத்தில் சென்றுகொண்டிருந்தார். விமானத்தில் அஜித் பவார், 2 விமானிகள் உள்பட 5 பேர் பயணித்தனர். புனேவின் பாராமதி விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அஜித் பவார் உள்பட விமானத்தில் பயணித்த 5 பேரும் உயிரிழந்தனர். இதனிடையே, விமான விபத்துக்கான காரணம் குறித்து மத்திய விமான போக்குவரத்து இயக்குனரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அஜித் பவார் விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது என்று மத்திய விமானப்போக்குவரத்து மந்திரி ராம் மோகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், விமான விபத்து நடந்த பகுதியில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம், விமான விபத்து புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அஜித் பவார் பயணித்த விமானம் தரையிறங்கியபோது ஓடுதளத்தில் போதிய வெளிச்சமின்மை நிலவியது தெரியவந்துள்ளது’ என்றார்.

1 More update

Next Story