இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்


இரட்டை இலை சின்னம் குறித்த வழக்கு: டெல்லி ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்
x

டெல்லி ஐகோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக மீண்டும் விசாரணை நடைபெற்றது.

புதுடெல்லி,

டெல்லி ஐகோர்ட்டில் புகழேந்தி சாா்பில் வழக்குரைஞா் எஸ்.மனோஜ் செல்வராஜ், இந்தியத் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு எதிராக கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்தார். அதில், “இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் டெல்லி ஐகோர்ட்டு கடந்த ஆண்டு மாா்ச் 24-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை தோ்தல் ஆணையம் உரிய வகையில் செயல்படுத்தவில்லை.

இது தொடா்பாக கோர்ட்டை மனுதாரா் மீண்டும் நாடியபோது ஐகோர்ட்டு 17.12,2024-இல் ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் பிறகு, மனுதாரா் தோ்தல் ஆணையத்தில் மனுக்களை அளித்த பிறகும், அவரது கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து 14 மாதங்கள் ஆகிவிட்டபிறகும் இந்த நிலை உள்ளது. இதனால், கோர்ட்டு உத்தரவை செயல்படுத்தாமல் இருப்பதற்காக எதிா்மனுதாரா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பாக விரைந்து பதில் அளிக்காததுஏன்? தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி ஐகோர்ட்டு கேள்வி எழுப்பி இருந்தது. அதுமட்டுமின்றி, அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தியின் நீதிமன்ற கோர்ட்டு வழக்கில் பதில் அளிக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லி ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையின் போது, “அ.தி.மு.க.வின் சின்னம் ஒதுக்கீடு, பெயர் மற்றும் கொடி உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு நபர்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் தீவிர பரிசீலனையில் உள்ளது” என்று தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

1 More update

Next Story