இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 08-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 8 Dec 2025 4:14 PM IST
அமலாக்கத்துறை அலுவலகத்தில் வாரம் இருமுறை ஆஜராக செந்தில்பாலாஜிக்கு விதித்த ஜாமின் நிபந்தனையில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் போது மட்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி ஆஜராக உத்தரவிடலாம் என சுப்ரீம் கோர்ட்டு உத்த்ரவிட்டுள்ளது.
- 8 Dec 2025 4:09 PM IST
பிரத்திகா ராவலுக்கு ரூ.1.5 கோடி பரிசுத் தொகை வழங்கிய டெல்லி முதல்-மந்திரி
மகளிர் கிரிக்கெட் உலக கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற பிரத்திகா ராவலுக்கு ரூ.1.5 கோடி பரிசுத் தொகை வழங்கினார் டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா. லீக் சுற்று போட்டிகளில் 308 ரன்கள் விளாசிய இவர், காயம் காரணமாக அரையிறுதி, இறுதிப்போட்டியில் விளையாடவில்லை.
- 8 Dec 2025 4:04 PM IST
விஜய பாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்
புதுகோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விஜயபாஸ்கர் வீட்டிற்கு ஏற்கெனவே 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் அச்சுறுத்தப்பட்டுள்ளது.
- 8 Dec 2025 3:45 PM IST
நாளை புதிய வாக்காளர் சேர்க்கை
தமிழ்நாடு முழுவதும் நாளை டிசம்பர் 9 செவ்வாய்க்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் ...
18 வயது பூர்த்தியடைந்த வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் தேவையான ஆவணங்கள்...
1.ஆதார் கார்டு
2.போட்டோ 1
3.பிறப்புச் சான்றிதழ்
4.பள்ளிச் சான்றிதழ்(TC)
நாளை தொடக்கப் பள்ளிகளில் BLO க்கள் இருப்பார்கள் அவர்களிடம் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
- 8 Dec 2025 3:10 PM IST
இந்தியா வருகிறார் ஜெலன்ஸ்கி
* ரஷிய அதிபர் புதின் இந்தியா வந்து சென்ற நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வரும் ஜனவரி டெல்லி வருகிறார்.
* பயண தேதி இந்திய -உக்ரைன் வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின் அறிவிக்கப்படும்.
* புதின் இந்தியா வருகையின்போது உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து பிரதமர் மோடி பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- 8 Dec 2025 2:38 PM IST
சனாதன தர்மம் குருட்டு நம்பிக்கையின் சின்னம் அல்ல - பவன் கல்யாண்
`சனாதன தர்மம் குருட்டு நம்பிக்கையின் சின்னம் அல்ல. அது மனிதகுலத்திற்கு அறிவியல் பாதையை வழங்கிய ஆன்மிக அறிவியல். சனாதன விவகாரத்தில் யாரும் நம்மைத் தாக்குவதற்கு துணியாதபடி குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள இந்துக்கள், தர்மத்தை கடைபிடிக்க சட்டப் போராட்டங்களை நடத்த வேண்டி இருந்தது. இதுபோன்று மீண்டும் ஏற்படாமல் இருக்க ஒவ்வொரு இந்துவும் விழிப்புடன் இருக்க வேண்டும். சனாதன தர்மம், அரசியலமைப்பு இரண்டும் ஒரே இலக்கை நோக்கி செல்கிறது என ஆந்திர துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.
- 8 Dec 2025 11:44 AM IST
உறுதுணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி-நடிகர் திலீப்
என்னுடைய திரை வாழ்வை அழிக்க முயற்சி நடைபெற்றது என்று நடிகை பாலியல் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்ட நடிகர் திலீப் பேட்டி அளித்துள்ளார். எனக்காக பிரார்த்தனை செய்த கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும், எனக்காக வாதிட்ட வழக்கறிஞர்கள், ஆதரவாக இருந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி எனவும் திலீப் கூறினார்.
















