இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 08-12-2025


LIVE
இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 08-12-2025
x
தினத்தந்தி 8 Dec 2025 9:31 AM IST (Updated: 8 Dec 2025 6:11 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • இறுதிக்கட்டத்தை நெருங்கும் எஸ்.ஐ.ஆர் பணிகள்
    8 Dec 2025 6:11 PM IST

    இறுதிக்கட்டத்தை நெருங்கும் எஸ்.ஐ.ஆர் பணிகள்

    தமிழ்நாட்டில் இன்று மாலை 3 மணி வரை 99.27% படிவங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதுவரை 99.91 சதவீத வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

  • 9.55 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து... ரூ.827 கோடி ரீபண்ட்
    8 Dec 2025 6:07 PM IST

    9.55 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து... ரூ.827 கோடி ரீபண்ட்

    நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்தை அடுத்து, இதுவரை ரூ.827 கோடியை பயணிகளுக்கு இண்டிகோ |நிறுவனம் திரும்ப அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 9.55 லட்சம் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு பணம் திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 9,000 லக்கேஜ்களில் 4,500 டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

  • 8 Dec 2025 6:01 PM IST

    புதுச்சேரி உப்பளத்தில் நாளை நடைபெறவுள்ள தவெக பொதுக்கூட்டத்திற்கு வரும் மக்களுக்கு QR Code அடங்கிய பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

  • டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி - எடப்பாடி பழனிசாமி
    8 Dec 2025 5:50 PM IST

    டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடி - எடப்பாடி பழனிசாமி

    நகராட்சி நிர்வாக துறையில் டெண்டர் எடுப்பதில் மட்டும் ரூ.1,020 கோடிக்கு ஊழலைக் கண்டறிந்துள்ளதாக தமிழக பொறுப்பு டி.ஜி.பி.க்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளதாக செய்திகள் வருகின்றன. அமைச்சர் நேரு, தனது உறவினர்கள் வாயிலாக டெண்டருக்கு 7.5 சதவீத முதல் 10 சதவீதம் வரை கமிஷன் கொள்ளை அடித்துள்ளது, இக்கடிதம் வாயிலாக வெளிவந்துள்ளது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

  • விஜய் தந்தையுடன் காங்கிரஸ் பிரமுகர் சந்திப்பு
    8 Dec 2025 5:45 PM IST

    விஜய் தந்தையுடன் காங்கிரஸ் பிரமுகர் சந்திப்பு

    தவெக தலைவர் விஜயின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருடன், காங்கிரஸ் மாநில 10 செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுசாமி சந்தித்துள்ளார். நண்பர் என்ற முறையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை சந்தித்ததாக திருச்சி வேலுசாமி தகவல் தெரிவித்துள்ளார்.

  • கண்ணாமூச்சி ரேரே கண்டுபிடி யாரு? கோவை  கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
    8 Dec 2025 5:05 PM IST

    கண்ணாமூச்சி ரேரே கண்டுபிடி யாரு? கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

    கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 13வது முறையாக மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததையடுத்து, அலுவலகம் முழுவதும் நடத்திய சோதனையில் புரளி என தெரியவந்தது. குறிப்பாக அந்த மெயிலில், நடிகை நிவேதா பெத்துராஜ் பெயரை குறிப்பிட்டு, ``கண்ணாமூச்சி ரேரே கண்டுபிடி யாரு?" என எழுதி அனுப்பப்பட்டிருந்ததாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

  • பால்கனி இடிந்து விபத்து
    8 Dec 2025 5:03 PM IST

    பால்கனி இடிந்து விபத்து

    கரூரில் குடியிருப்பில் செயல்பட்டு வந்த பல் மருத்துவமனையின் பால்கனி திடீரென இடிந்து விபத்துக்குள்ளானது. மழைநீர் தேங்கியதாலும், 60 ஆண்டுகள் பழமையான கட்டடம் என்பதாலும் விபத்து ஏற்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் பொதுமக்கள் யாரும் அப்பகுதியில் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

  • இந்தியாவில் `டிரம்ப்’ ரோடு..!
    8 Dec 2025 5:01 PM IST

    இந்தியாவில் `டிரம்ப்’ ரோடு..!

    சமீபத்தில், தெலங்கனா முதல்வர் ரேவந்த் ரெட்டி முக்கியமான சாலைகளுக்கு உலகளாவிய பெயர்களை சூட்ட வேண்டும் என்று பேசியிருந்த நிலையில், ஹைதராபாத்தில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தை ஒட்டிய உயர்மட்ட சாலைக்கு டொனால்ட் டிரம்ப் அவென்யூ என்று பெயர் சூட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதேபோல புதிய பசுமை வழி சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் பெயரை சூட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்
    8 Dec 2025 4:59 PM IST

    ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற இளைஞர் அடித்து செல்லப்பட்ட நிலையில், காவல் எல்லை பிரச்சினையால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புகார் தொடர்பாக போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என மறியலில் ஈடுபட்ட உறவினர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

1 More update

Next Story