டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி


டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
x

அலங்கார வாகனத்தின் இருபுறமும் கலைஞர்கள் சிலம்பாட்டம், மயிலாட்டம் ஆடியபடி சென்றனர்.

புதுடெல்லி,

நாட்டின் 77-வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 77-வது குடியரசு தின விழாவையொட்டி டெல்லி கடமைப் பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய கொடியை ஏற்றினார். அப்போது, இந்தியாவின் படை வலிமை, பன்முக கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அணிவகுப்பு நடந்தது.

இந்த அணிவகுப்பில் தமிழக அரசின் வாகனம் அணிவகுத்தது. தமிழக அரசின் வாகனத்தில் ஜல்லிக்கட்டு காளையை மாடுபிடி வீரர்கள் அடக்குவது போன்ற முகப்பு காட்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் அலங்கார வாகனத்தின் இருபுறமும் கலைஞர்கள் சிலம்பாட்டம், மயிலாட்டம் ஆடியபடி சென்றனர். தமிழ்நாட்டை தொடர்ந்து, புதுச்சேரி, உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், மத்திய பிரதேசம், பஞ்சாப் வாகனங்கள் அணிவகுத்தன.

1 More update

Next Story