ஜம்முவில் மீண்டும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில் எல்லைப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தத்தப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மீது பாகிஸ்தான் நேற்று திடீர் ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே கிட்டத்தட்ட போர் உருவாகி உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் மீது இந்திய கடற்படை தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய கடற்படை போர் கப்பல்கள் அரபிக்கடலில் இருந்து பாகிஸ்தான் துறைமுகம் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், நாட்டில் பாதுகாப்பு சூழல் குறித்தும், நேற்று இரவு நடந்த தாக்குதல் குறித்தும் தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின்போது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Live Updates
- 9 May 2025 9:29 AM IST
அதிகரிக்கும் பதற்றம்.. ராஜஸ்தான் முதல்-மந்திரி உயர்மட்ட ஆலோசனை
இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளசூழலில், ராஜஸ்தான் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இதன்படி எல்லையோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், விடுமுறையை ரத்து செய்துவிட்டு அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்பவும் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா அறிவுறுத்தி உள்ளார்.
- 9 May 2025 9:12 AM IST
பாகிஸ்தானுக்கு பதிலடி.. வீடியோவை வெளியிட்டது இந்திய ராணுவம்
பாகிஸ்தான் டிரோன் தாக்குதல்களை இந்தியப் படைகள் முறியடித்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. வெடிகுண்டுகளுடன் பல டிரோன்களை அனுப்பி இந்தியாவின் மேற்கு எல்லையை தாக்க பாகிஸ்தான் முயற்சி செய்தநிலையில், பாகிஸ்தானின் அனைத்து விதமான அத்துமீறல்களுக்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்ததாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
- 9 May 2025 8:56 AM IST
இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை பேரணி: முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
- 9 May 2025 8:53 AM IST
முப்படை அதிகாரிகளுடன் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தி வருகிறார். மத்திய மந்திரிகள் இருவரும் ஆலோசனை நடத்திய பிறகு பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.
- 9 May 2025 8:16 AM IST
பாகிஸ்தானின் 50-க்கும் மேற்பட்ட டிரோன்கள் அழிப்பு
பாகிஸ்தான் 50க்கும் மேற்பட்ட டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்தது. இந்த தாக்குதலானது உதம்பூர், சம்பா, ஜம்மு, அக்னூர், நக்ரோட்டா மற்றும் பதான்கோட் பகுதிகளில் நடத்தது.
- 9 May 2025 8:14 AM IST
பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்
பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இதன்படி பாகிஸ்தானில் இருந்து பதன்கோட் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் நோக்கி வந்த எப் 16 மற்றும் ஜேஎப். 17 ரகத்தை சேர்ந்த 2 போர் விமானங்களை நடுவழியில் மறித்து இந்தியா சுட்டு வீழ்த்தியது. இதேபோல் மேலும் ஒரு விமானத்தையும் இந்தியா சுட்டு வீழ்த்தியது.
- 9 May 2025 7:40 AM IST
விடுதலைப்படை தாக்குதல்: பாகிஸ்தானின் பெரிய மாகாணமான பலுசிஸ்தானில் பதற்றம்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பலுசிஸ்தானில் பாகிஸ்தானின் ராணுவத்தினரைக் குறிவைத்து பலுச் விடுதலைப்படை கடும் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
- 9 May 2025 7:38 AM IST
போர் பதற்றம்... பாதுகாப்பு கருதி வட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் மூடல்
எல்லையில் நிலவி வரும் போர் பதற்றத்தை தொடர்ந்து. ஜம்மு காஷ்மீரில் பள்ளி, கல்லூரிகள் காலவரையின்றி மூடப்பட்டன.
மேலும் பஞ்சாப்பில் அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும், இமாச்சல் பிரதேசம் உனா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களும் பாதுகாப்பு கருதி மூட உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.
- 9 May 2025 7:37 AM IST
விடிய விடிய பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி: ஜம்மு விரைகிறார் உமர் அப்துல்லா
ஜம்முவில் பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்ட நிலையில், இன்று அம்மாநில முதல் மந்திரி உமர் அப்துல்லா. நிலைமையை ஆய்வு செய்ய இருப்பதாக கூறியுள்ளார்.
- 9 May 2025 7:06 AM IST
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம்: சீனா சொல்வது என்ன?
சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் லின் ஜியான் பத்திரிகையாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “நாங்கள் இந்தியா பாகிஸ்தான் இரு தரப்பிலும் அமைதியும், சமாதானமும் ஏற்பட அதிக ஆர்வம் காட்டுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.