குடியரசு தினவிழாவில் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது; ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்


குடியரசு தினவிழாவில் சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது; ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்
x

ராகேஷ் சர்மாவுக்குப்பிறகு முதல் முறையாக விண்வெளி சென்ற இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ஆவார்.

புதுடெல்லி,

அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், எஸ்பேஸ் ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றார்.

விண்வெளியில் 18 நாட்கள் தங்கியிருந்த அவர் சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் என்ற பெருமையை பெற்றார். விண்வெளியில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட அவர், அந்த பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து பூமி திரும்பினார்.

இந்திய விமானப்படை வீரரான அவர், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்கும் தேர்வாகி உள்ளார். ராகேஷ் சர்மாவுக்குப்பிறகு முதல் முறையாக விண்வெளி சென்ற இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு இந்தியாவின் அமைதிக்கால மிக உயர்ந்த வீரதீர விருதான அசோக சக்ரா விருது அறிவிக்கப்பட்டது.

இந்த விருதை டெல்லியில் நேற்று நடந்த குடியரசு தினவிழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு சுபான்ஷு சுக்லாவுக்கு வழங்கி கவுரவித்தார்.

1 More update

Next Story