டெல்லி குண்டுவெடிப்பு: குற்றவாளிகளில் 5 பேரின் என்.ஐ.ஏ. காவல் 16ம் தேதி வரை நீட்டிப்பு


டெல்லி குண்டுவெடிப்பு: குற்றவாளிகளில் 5 பேரின் என்.ஐ.ஏ. காவல் 16ம் தேதி வரை நீட்டிப்பு
x

டெல்லி குண்டுவெடிப்பு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

டெல்லி,

தலைநகர் டெல்லியின் செங்கோட்டை அருகே கடந்த ஆண்டு நவம்பர் 10ம் தேதி குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த பயங்கரவாத தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அடில் ரதீர், ஷாகின் சயது, முசுமில் கானி ஆகியோர் டாக்டர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் என்.ஐ.ஏ. விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளான அடில் ரதீர், ஷாகின் சயது, முசுமில் கானி, இர்பான் அகமது, ஜசீர் பிலால் வானி ஆகிய 5 பேரின் என்.ஐ.ஏ. காவல் இன்றுடன் நிறைவடைந்தது. இதையடுத்து, 5 பேரின் காவலை நீட்டிக்க டெல்லி கோர்ட்டில் என்.ஐ.ஏ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மனுவை இன்று விசரித்த டெல்லி கோர்ட்டு பயங்கரவாதிகள் 5 பேரின் என்.ஐ.ஏ. காவலை வரும் 16ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது.

1 More update

Next Story