குஜராத்: சோமநாதர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்

கண்கவர் கலைநிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி கண்டுகளித்தார்.
காந்தி நகர்,
குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற இந்து மத வழிபாட்டு தலமான சோமநாதர் கோவில் (சிவன் கோவில்) உள்ளது. இந்த கோவில் 1026ம் ஆண்டு கஜினி முகமது படையெடுப்பால் பெரும் சேதமடைந்தது. பின்னர் பல்வேறு காலகட்டங்களில் முகலாய படையெடுப்புகளாலும் பெரும் சேதமடைந்தது. இதையடுத்து, நாடு சுதந்திரம் அடைந்தபின் 1951ம் ஆண்டு சர்தார் வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் முயற்சியால் கோவில் மீண்டும் கட்டப்பட்டது.
இந்நிலையில், குஜராத் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று சோமநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பினர், முதன் முதலில் கோவிலில் முகலாய படையெடுப்பு நடைபெற்று ஆயிரம் ஆண்டுகள் கடந்ததை அனுசரிக்கும் வகையில் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர்,வாணவேடிக்கை, டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி கண்டுகளித்தார்.






