ம.பி.: ரூ.4,400 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை துவக்கி வைத்த மத்திய மந்திரி கட்காரி

மத்திய பிரதேசத்திற்கு மத்திய சாலை நிதியின் கீழ் ரூ.1,600 கோடியை நிதின் கட்கரி பரிசாக அறிவித்துள்ளார்.
விதிஷா,
மத்திய பிரதேசத்தின் விதிஷா நகரில் ரூ.4,400 கோடி மதிப்பிலான 8 தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்கான திட்ட பணிகளை மத்திய மந்திரி நிதின் கட்காரி துவக்கி வைத்துள்ளார். இதனுடன், ரூ.450 கோடி மதிப்பிலான வளர்ச்சி பணிகளும் தொடங்கி வைக்கப்பட்டன.
இதேபோன்று, ரூ.16 ஆயிரம் கோடி செலவில் விதிஷா-சாகர்-கோட்டா பசுமை விரைவு சாலை அமைப்பதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது என கட்காரி மேடையில் அறிவித்தார்.
இதுதவிர, மத்திய பிரதேசத்திற்கு மத்திய சாலை நிதியின் கீழ் ரூ.1,600 கோடியை நிதின் கட்கரி பரிசாக அறிவித்துள்ளார். இதில் ரூ.400 கோடி விதிஷா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட எட்டு சட்டசபை தொகுதிகளுக்கு, ஒரு தொகுதிக்கு தலா ரூ.50 கோடி வீதம் சிறப்பு ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி டாக்டர் மோகன் யாதவ், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்களுக்கான மந்திரி சிவராஜ் சிங் சவுகான் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.






