மத்திய பிரதேசம்: சரக்கு வாகனம்-டிராக்டர் மோதல்; 5 பேர் பலி

குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக 5 பேரும் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
போபால்,
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் பெராசியா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சரக்கு வாகனம் ஒன்றும் டிராக்டரும் எதிரெதிரே நேற்றிரவு மோதி கொண்டன. இந்த விபத்தில், சரக்கு வாகனத்தில் பயணித்த 5 பேரும் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு பெராசியாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் 5 பேரும் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதுபற்றி பெராசியா எம்.எல்.ஏ. விஷ்ணு கத்ரி கூறும்போது, துரதிர்ஷ்டவசத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண உதவி கிடைப்பதற்காக, முதல்-மந்திரி மோகன் யாதவிடம் பேசுவேன். விபத்திற்கான காரணம் என்னவென உறுதி செய்யப்பட வேண்டியது அவசியம். அதுபற்றி விசாரணை நடத்தப்படும் என்றார்.
Related Tags :
Next Story






