கேரளாவில் லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு வென்றவர் கடத்தல்: போலீசார் வலைவீச்சு


கேரளாவில் லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு வென்றவர் கடத்தல்: போலீசார் வலைவீச்சு
x

சாதிக் என்பவருக்கு கடந்த மாதம் 30-ந்தேதி லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்தது.

கண்ணூர்,

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பரவூரை சேர்ந்த சாதிக் (வயது46) என்பவருக்கு கடந்த மாதம் 30-ந்தேதி லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு விழுந்தது. அந்த பணம் கிடைப்பதற்கு தாமதம் ஆகும் என்பதாலும், கணிசமான தொகை வரியாக பிடிக்கப்படும் என்பதாலும் தனது டிக்கெட்டை அதிக தொகைக்கு விற்பனை செய்ய சாதிக் முயன்றார்.

இதையறிந்த கும்பல் ஒன்று அவரிடம் இருந்து அதிக தொகைக்கு லாட்டரி டிக்கெட்டை பெற்றுக்கொள்வதாக கூறி சாதிக்கை பரவூர் நகருக்கு வரவழைத்தனர். அதை நம்பி தனது நண்பருடன் சாதிக் அங்கு சென்றார். அப்போது ஒரு வாகனத்தில் வந்த அந்த கும்பல் இருவரையும் வாகனத்தில் வலுக்கட்டாயமாக ஏற்றிக்கொண்டு சென்றனர்.

சிறிது தூரம் சென்றபிறகு சாதிக்கின் நண்பரை இறக்கி விட்ட அவர்கள், சாதிக்கை கடத்திச்சென்றனர். பின்னர் அந்த லாட்டரி டிக்கெட்டை பறித்துக்கொண்டு இரவு 11.30 மணியளவில் சாதிக்கை இறக்கி விட்டனர். இதைத்தொடர்ந்து சாதிக் தனக்கு நேர்ந்த துயரம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த கும்பலை சேர்ந்த ஒருவரை கைது செய்தனர். மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். லாட்டரியில் ரூ.1 கோடி பரிசு வென்றவரை ஒருகும்பல் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story