3வீடு, கார், ஆட்டோ என வாங்கி குவித்த பிச்சைக்காரர்.. நகை கடைக்காரர்களுக்கு கடன் கொடுக்கும் ஆச்சரியம்


3வீடு, கார், ஆட்டோ என வாங்கி குவித்த பிச்சைக்காரர்.. நகை கடைக்காரர்களுக்கு கடன் கொடுக்கும் ஆச்சரியம்
x

மாற்றுத்திறனாளியான இவர் தினமும் ஈட்டும் வருமானத்தில் உள்ளூர் வியாபாரிகளுக்கு வட்டிக்கு 5 லட்சம் வரை பணம் கொடுத்து உள்ளார்.

இந்தூர்,

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதன் ஒருபகுதியாக இந்தூரில் பிச்சை எடுத்துகொடிருந்த 6,500 பேரை பிடித்து ஆலீசனைகளை வழங்கி அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், அங்குள்ள நகைக்கடை பஜாரில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது மாற்றுத்திறனாளியான மங்கிலால் என்பவர் 2 சக்கர சைக்கிளில் பிச்சை எடுத்து கொண்டு இருந்தார். அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் கூறிய சொத்து மதிப்பு பட்டியலை கேட்டு அதிகரிகள் ஒரு நிமிடம் வாயடைத்து போயினர்.

மங்கிலாலுக்கு இந்தூரில் சொந்தமாக 3 வீடுகள் உள்ளன. அதில் ஒரு வீடு மாற்றுத்திறனாளிகளுக்காக செஞ்சிலுவை சங்கத்தால் வழங்கப்பட்டது. 3 ஆட்டோக்களை வாங்கி வாடைக்கு விட்டுள்ளார். இந்தூரில் இருந்து வெளியூர் செல்வதற்காக ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை வாங்கி அதற்உ டிரைவரையும் அமர்த்தி உள்ளார். இதில் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால் பிச்சை எடுக்கும் அதே நகைக்கடை பஜாரில் உள்ள நகைகடை உரிமையாளர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளார். அதை கண்டிப்புடன் வசூல் செய்து வருவதாக தெரிவித்தார். அதிகாரிகள் மங்கிலாவிடம் மேலும் எவ்வளவு சொத்துக்கள் உள்ளது என விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story