முன்னாள் துணை ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி


முன்னாள் துணை ஜனாதிபதிக்கு உடல்நலக்குறைவு - மருத்துவமனையில் அனுமதி
x

தனிப்பட்ட காரணங்களுக்காக துணை ஜனாதிபதி பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.

டெல்லி,

முன்னாள் துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர் (வயது 74). இவர் 2022 முதல் 2025ம் ஆண்டுவரை நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்தார். அதன்பின்னர், தனிப்பட்ட காரணங்களுக்காக ஜூலை 21ம் தேதி துணை ஜனாதிபதி பதவியை தன்கர் ராஜினாமா செய்தார்.

இந்நிலையில், முன்னாள் துணை ஜனாதிபதி தன்கர் கடந்த சனிக்கிழமை வீட்டில் வைத்து 2 முறை மயக்கமடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து தன்கருக்கு இன்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, தன்கர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டது. தற்போது தன்கர் நலமுடன் உள்ளதாகவும் அவர் மருத்துவமனையில் டாக்டர்கள் கண்காணிப்பில் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story