அசாம்: ஆற்றில் கவிழ்ந்த படகு; 6 பேர் மாயம்


அசாம்: ஆற்றில் கவிழ்ந்த படகு; 6 பேர் மாயம்
x

பரத்பூர் பகுதியில் கடந்த ஆண்டு அக்டோபரில் படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 22 பேரில் 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

பார்பேட்டா,

அசாமின் பார்பேட்டா மாவட்டத்தில் ரஹாம்பூர் பகுதிக்கு உட்பட்ட இடத்தில் பிரம்மபுத்திரா ஆற்றில் இன்று படகு ஒன்று பயணித்து கொண்டிருந்தது. அப்போது, அது திடீரென ஆற்றின் நடுவே கவிழ்ந்தது. இதில், படகில் பயணித்த 6 பேர் காணாமல் போனார்கள்.

இது தகவல் அறிந்து, தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில பேரிடர் மீட்பு படை, போலீசார் இணைந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படகில் உயிர்காக்கும் கவசம் எதுவும் இல்லை என தகவல் தெரிவிக்கின்றது.

கடந்த ஆண்டு அக்டோபரில் பரத்பூர் பகுதியில் படகு கவிழ்ந்ததில் அதில் பயணித்த 22 பேரில் 13 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது. 8 பேர் காணாமல் போனார்கள். அவர்களை தேடி கண்டுபிடிக்க முடியவில்லை.

1 More update

Next Story