அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி


அஜித் பவார் மரணம்; சரத் பவாரை தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி
x

2019-ம் ஆண்டு சரத் பவார் கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.க. தலைமையிலான அரசில் இணைந்து, துணை முதல்-மந்திரியானார்.

புதுடெல்லி,

மராட்டியத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரசாரம் மேற்கொள்வதற்காக மராட்டிய துணை முதல்-மந்திரி அஜித் பவார் சிறிய ரக சார்ட்டர்டு விமானத்தில் இன்று புறப்பட்டு சென்றார். அவருடன் பாதுகாப்பு அதிகாரி ஒருவர், 2 விமானிகள் மற்றும் விமான ஊழியர் ஒருவர் என மொத்தம் 5 பேர் பயணித்தனர்.

இந்த நிலையில், விமானம் பாராமதி நகரில் ஓடுதளத்தில் காலை 8.48 மணியளவில் தரையிறங்கியபோது திடீரென விபத்தில் சிக்கியது. இதில், விமானம் தீப்பிடித்து எரிந்தது. இந்த துயர சம்பவத்தில் சிக்கி, அஜித் பவார் உள்ளிட்ட 5 பேரும் பலியானார்கள்.

அஜித் பவாரின் மறைவை அடுத்து, பிரதமர் மோடி இன்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத் பவார்) தலைவர் சரத் பவாரை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு அவருக்கு இரங்கல் தெரிவித்து கொண்டார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், மராட்டியத்தின் பாராமதியில் ஏற்பட்ட சோகத்திற்குரிய விமான விபத்து பற்றி அறிந்து வருத்தமடைந்தேன். விபத்தில் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருடனும் என்னுடைய நினைவுகள் உள்ளன. இந்த பெருந்துயரம் நேர்ந்த தருணத்தில், சோகத்தில் வாடும் குடும்பத்தினருக்கு பலமும், தைரியமும் கிடைக்க இறைவனை வேண்டி கொள்கிறேன் என தெரிவித்து உள்ளார்.

1 More update

Next Story