77- வது குடியரசு தினம்: பிரதமர் மோடி வாழ்த்து

கோப்புப்படம்
நாட்டு மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
இந்தியாவின் 77-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த குடியரசு தின வாழ்த்துகள். இந்தியாவின் பெருமை மற்றும் மகிமையின் அடையாளமான இந்த தேசிய விழா, உங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் புதிய ஆற்றலையும், உற்சாகத்தையும் கொடுக்கட்டும். வளர்ந்த இந்தியாவிற்கான உறுதிப்பாடு இன்னும் வலுப்பெறட்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story






