ரிசர்வ் வங்கியில் வேலை: 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்- 572 காலிப்பணியிடங்கள்


ரிசர்வ் வங்கியில் வேலை: 10 ஆம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்-  572 காலிப்பணியிடங்கள்
x

காலியாக உள்ள 572 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் தலைமை அலுவலகத்திலும், கிளை அலுவலகங்களிலும் காலியாக உள்ள 572 உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது. இதற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் பின்வருமாறு:

பணியிடங்கள் விவரம்: அலுவலக உதவியாளர் - மொத்தம் 572 பணியிடங்கள் (சென்னையில் மட்டும் 09)

கல்வித்தகுதி: 01.01.2026 தேதிப்படி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இருந்து 10 ஆம் வகுப்பு முடித்து இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழி நன்கு தெரிந்து இருப்பது அவசியம்.

வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது, 02.01.2001-க்கு முன்பாகவோ, 01.01.2008 க்கு பிறகோ பிறந்தவர்கள் விண்ணப்பிக்க முடியாது. அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகள் உண்டு.

சம்பளம்: மாதம் ரூ. 46,029/-

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, மொழித் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப கட்டணம்: ரூ. 450 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ. 50 கட்டணம் ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி? (https://opportunities.rbi.org.in/) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 04.02.2026 கடைசி நாளாகும்.

1 More update

Next Story