தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்

இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.
மும்பை,
சர்வதேச நிலையற்ற தன்மை, அமெரிக்கா - வெனிசுலா மோதல், இந்தியா மீது அமெரிக்க வரிவிதிபு உள்பட பல்வேறு காரணங்களால் இந்திய பங்குச்சந்தை கடந்த திங்கட்கிழமை முதல் தொடர் சரிவை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், வாரத்தின் இறுதிநாளான இன்றும் இந்திய பங்குச்சந்தை (09.01.2026 - வெள்ளிக்கிழமை) சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.
அதன்படி, 160 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 717 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 379 புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 59 ஆயிரத்து 304 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது .
250 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 422 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 504 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ் 83 ஆயிரத்து 699 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
7 புள்ளிகள் சரிந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 752 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 247 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 762 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருவதால் முதலீட்டாளர்கள் நஷ்டமடைந்துள்ளனர்.






