இந்திய மருந்து சந்தையில் 2025-ம் ஆண்டில் ரூ.2.4 லட்சம் கோடி வருவாய்; அறிக்கையில் தகவல்


இந்திய மருந்து சந்தையில் 2025-ம் ஆண்டில் ரூ.2.4 லட்சம் கோடி வருவாய்; அறிக்கையில் தகவல்
x

2026-ம் ஆண்டில் 7.8 சதவீதம் முதல் 8.1 சதவீதம் என்ற அதே வளர்ச்சி அளவில் இருக்கும் என பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

இந்திய மருந்து சந்தையானது, முடிவடைந்த கடந்த 2025-ம் ஆண்டில் ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்து 672 கோடி அளவுக்கு வருவாய் ஈட்டி சாதனை படைத்து உள்ளது. இது 8.1 சதவீத வளர்ச்சியாகும்.

தொடர்ந்து மருந்து துறையானது மீட்சியடைந்து வந்து, டிசம்பருடன் முடிந்த ஆண்டில் எதிர்பார்த்த அளவுக்கும் கூடுலான வளர்ச்சி நிலையை அடைந்துள்ளது.

இதற்கு விலை உயர்வு, புதிய மருந்து பொருட்களின் வெளியீடு மற்றும் பொருட்களின் உற்பத்தி ஆகியவை காரணிகளாக பார்க்கப்படுகின்றன.

இதில், டிசம்பர் மாதத்தில் மட்டுமே மருந்து துறை 10.6 சதவீதம் என்ற அபரிமித வளர்ச்சியை கண்டது. 2026-ம் ஆண்டை எடுத்து கொண்டால், மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் இருந்து, சந்தைகளில் புது பிராண்டுகளின் வெளியீடு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வளர்ச்சியானது 2026-ம் ஆண்டில் 7.8 சதவீதம் முதல் 8.1 சதவீதம் என 2025-ம் ஆண்டில் காணப்பட்ட அதே வளர்ச்சி நிலையில் இருக்கும் என பார்க்கப்படுகிறது.

1 More update

Next Story