தலைக்கு தினமும் ஷாம்பு போட்டு குளித்தால் என்ன ஆகும்..?


தலைக்கு தினமும் ஷாம்பு போட்டு குளித்தால் என்ன ஆகும்..?
x
தினத்தந்தி 12 Jan 2026 4:49 PM IST (Updated: 12 Jan 2026 5:05 PM IST)
t-max-icont-min-icon

முடியில் எண்ணெய் பசைத்தன்மை குறைவாக இருப்பவர்களுக்கு பாதிப்புகள் அதிகரிக்கும்.

தலைமுடியை பராமரிப்பதற்கும், அழுக்குபடியாமல் சுத்தமாக பேணுவதற்கும் பெரும்பாலான மக்கள் ஷாம்பு பயன்படுத்துகிறார்கள். தினமும் குளிக்கும்போது தவறாமல் ஷாம்பு உபயோகிப்பவர்களும் நிறைய பேர் இருக்கிறார்கள். இவ்வாறு தினமும் ஷாம்பு பயன்படுத்துவது தலைமுடி ஆரோக்கியத்திற்கு சிறந்ததா என்று பார்ப்போம்.

நன்மைகள்:

உச்சந்தலை முடியை ஈரப்பதமாக வைத்திருப்பதற்கு சீபம் எனப்படும் இயற்கை எண்ணெய் உற்பத்தி செய்யப்படும். அது அதிக அளவில் உற்பத்தியானால் தலைமுடி எண்ணெய் பசை தன்மையுடனும், தளர்வாகவும் காட்சியளிக்கும். எனவே சல்பேட் ரசாயனம் கலப்பில்லாத ஷாம்புவை தினசரி பயன்படுத்தி தலைமுடியை சுத்தம் செய்வது, எண்ணெய் பசை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும்.

தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை பின்பற்றுபவர்கள், மாசுபாடு நிலவும் பகுதியில் வசிப்பவர்கள் தினமும் ஷாம்பு பயன்படுத்துவது கூந்தலை சுத்தமாக பராமரிக்க உதவும்.

ஸ்டைலிஷாக காட்சியளிக்க விரும்புபவர்கள், தலைமுடிக்கு ஜெல், ஸ்பிரே உபயோகிப்பவர்கள் தினமும் ஷாம்பு உபயோகிப்பது தலைமுடி அழகுற ஜொலிக்க உதவிடும்.

குறைபாடுகள்:

அடிக்கடி ஷாம்பு உபயோகிப்பது தலைமுடியில் இருக்கும் இயற்கை எண்ணெய்யை அகற்றி முடி உதிர்தல், முடி வறட்சி போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதிலும் முடியில் எண்ணெய் பசைத்தன்மை குறைவாக இருப்பவர்களுக்கு இந்த பாதிப்புகள் அதிகரிக்கும். சில ஷாம்புகளில் கடுமையான ரசாயனங்கள் மற்றும் சல்பேட்டுகள் உள்ளன. அவை உச்சந்தலையை எரிச்சலடைய செய்யலாம்.

எது சிறந்தது?

இயற்கையாகவே எண்ணெய் பசையுள்ள உச்சந்தலை கொண்டவர்கள் அதிகப்படியான எண்ணெய் படிவதை தடுக்க தினமுமோ, இரண்டு நாட்களுக்கு ஒருமுறையோ ஷாம்பு பயன்படுத்துவதன் மூலம் கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம். வறண்ட, சுருள் முடி கொண்டவர்கள் ஈரப்பதத்தை தக்கவைத்து, முடி உதிர்தலைக் குறைக்க வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை ஷாம்பு பயன்படுத்தலாம்.

மெல்லிய முடி கொண்டவர்களுக்கு எண்ணெய் தன்மையை விரைவாக படியும். அவர்கள் தினமும் ஷாம்பு உபயோகிப்பது சிறந்தது. அடர்த்தியான அல்லது கரடுமுரடான முடி ஈரப்பதத்தை சிறப்பாக தக்கவைத்துக்கொள்ளும் என்பதால் வாரம் ஒருமுறை ஷாம்பு உபயோகப்படுத்தலாம். முடியின் தன்மையை பொறுத்து ஷாம்பு உபயோகிப்பது நல்லது.

தினமுமோ, வாரம் ஒருமுறையோ எப்போது பயன்படுத்துவதாக இருந்தாலும் மென்மையான சல்பேட் இல்லாத ஷாம்புவை பயன்படுத்துவது கூந்தல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவிடும்.

1 More update

Next Story