தொப்பையால் உடல் அழகு குறைந்துவிட்டதா..? இதை பாலோ பண்ணுங்க..!


தொப்பையால் உடல் அழகு குறைந்துவிட்டதா..? இதை பாலோ பண்ணுங்க..!
x

பொதுவாக அடிவயிற்றுப் பகுதியிலும், பிட்டம் பகுதியிலும்தான் கொழுப்பு அதிகமாகப் படியும்.

முன்பெல்லாம் தொப்பை ஆண்களுக்குத்தான் அதிகமாக இருக்கும். ஆனால், இப்பொழுதெல்லாம் பெண்களுக்கும் தொப்பை அதிகமாக இருக்கிறது. சில பெண்களுக்கு உடல் எடை அதிகமாக இருக்கிறதோ, இல்லையோ, ஆனால் தொப்பை மட்டும் ரொம்ப பெரிதாக இருக்கும். இதனால் பெண்களின் அழகே குறைந்துவிடும். வயிற்றில் கொழுப்பை ஒருமுறை சேர விட்டுவிட்டால் , அப்புறம் குறைப்பதென்பது மிகவும் சிரமமான காரியமாகும். பட்டினி கிடந்தாலும் சரி, கடுமையான உடற்பயிற்சி செய்தாலும் சரி, சிலருக்கு தொப்பை குறையவே குறையாது.

சாப்பிட்டவுடன் தூங்குவது, அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுவது, அதிக எண்ணெய் , மசாலா, அசைவ உணவுகளை அடிக்கடி உண்ணுவது, சரியான தூக்கமின்மை, தினமும் உடற்பயிற்சி இல்லாமை, கண்ட நேரத்தில் தூங்குவது, அதிக உடலுழைப்பு இல்லாமை, சோம்பேறித்தனம் இது போன்ற பல காரணங்கள் தான் வயிறு பெருத்துப் போகச் செய்கின்றன.

அதிக கொழுப்பு ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. பொதுவாக அதிக கொழுப்பு, அடிவயிற்றுப் பகுதியிலும், பிட்டம் பகுதியிலும்தான் அதிகமாகப் படியும். அதிக உடல் எடை உள்ளவர்களுக்கு, குடலிறக்கம், மூச்சுத் திணறல் பிரச்சினை, அதிக ரத்த அழுத்தம், அதிக ரத்தக் கொழுப்பு, சர்க்கரை நோய், பக்கவாதம், இருதய நோய், பித்தப்பையில் பிரச்சினை, மன அழுத்தம், தூக்கமின்மை, மூட்டுவலி, சில வகை புற்றுநோய்கள் வர வாய்ப்பு உண்டு.

தொப்பையைக் குறைக்க என்ன செய்யவேண்டும்?

1). ஆரோக்கியமான கொழுப்பு அதிகமுள்ள உணவுப் பொருட்களை உண்ண வேண்டும். இம்மாதிரி சாப்பிட்டால், தேவையில்லாத கொழுப்பை, உடலில் தேவையில்லாத இடத்தில் சேரவிடாது.

2). நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

3). அடிக்கடி கொள்ளு ரசம் குடிக்கலாம்.

4). ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சைச் சாற்றை சேர்த்து தினமும் குடிக்கலாம்.

5). வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு தினமும் குடிக்கலாம்.

6). பசி இல்லாத போது உண்ணக் கூடாது. பசி இல்லாமல் உண்ணும் உணவு அனைத்தும் உடல் எடையைக் கூட்டும்.

7). தினமும் தண்ணீர் சற்று அதிகமாகவே குடிக்கவேண்டும்.

8). சாப்பிட்டவுடன் படுக்கக் கூடாது.

9). சில பெண்களுக்கு குழந்தை பெற்ற பிறகுதான் உடல் எடையும் கூடிவிடுகிறது. இவர்களெல்லாம் வீட்டிலேயே தினமும் சிறிய உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

10) மாதவிடாய் நின்ற பெண்களுக்கு, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் பிரச்சினையால், உடலில் கொழுப்பு படியும் விதம் மாறிவிடுகிறது. மகப்பேறு மருத்துவ நிபுணரைச் சந்தித்து ஆலோசனை பெறவேண்டும்.

11). புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உண்ணவேண்டும்.

12). மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

13). ஓட்ஸ், கேரட், பருப்பு வகைகள் சேர்த்துக் கொள்ளலாம்.

14). ஆண்களைப் பொறுத்தவரை, அதிகப்படியாக மது அருந்தினால், அடி வயிற்றில் கொழுப்பு அதிகமாகப் படியும் என்று ஆய்வு கூறுகிறது. எனவே மதுப்பழக்கத்தை நிறுத்தவேண்டும்.

இடுப்பைச் சுற்றிலும் அதிகளவு எடையையும், ஆபத்தை விளைவிக்கும் கொழுப்பையும் சேர்த்து வைத்தால், உடலில் பல நோய்கள் உண்டாகும் என சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

-டாக்டர் எஸ். அமுதகுமார்.

1 More update

Next Story