சிவன்மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றி வழிபாடு


சிவன்மலையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றி வழிபாடு
x

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சிவன்மலையில் கடந்த மாதம் 24-ம் தேதி கார்த்திகை மகா தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நீலகிரி

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சிவன்மலையில் மாதந்தோறும் பௌர்ணமி திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 24-ம் தேதி கார்த்திகை மகா தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பல்வேறு விசேஷ பூஜைகள் நடைபெற்றது.

மாலை 5 மணிக்கு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பின்னர் 6 மணிக்கு சிவலிங்கம் நந்தீஸ்வரருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு மலை உச்சியில் உள்ள நெய் கொப்பரையில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது.

சிவன்மலை அறக்கட்டளை தலைவர் கேசவன் தீபத்தை ஏற்றி வைத்தார். செயலாளர் நடராஜ் மாஸ்டர், பாண்டு குருசாமி, ஜெயந்தி, தமிழழகன், ரத்தினம் உள்பட நிர்வாகிகள், பக்தர்கள் பக்தி கரகோஷமிட்டபடி தரிசனம் செய்தனர். மேலும் 300 படிக்கட்டுகளில் பக்தர்கள் விளக்குகள் ஏற்றி வைத்தனர். இதனால் சிவன் மலை தீபங்களால் ஜொலித்தது பார்ப்போரை ஈர்த்தது.

1 More update

Next Story