வத்தலக்குண்டு கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேகம்

கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்களும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு தெற்கு தெருவில் 500 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ மாரியம்மன் கோவில்கள் அமைந்துள்ளன. 500 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் முன்னோர்கள் நட்டு வைத்த அரிவாள்களை காவல் கருப்பண்ணசாமியாக இப்பகுதி பொது மக்கள் பழமை மாறாமல் வழிபட்டு வருகின்றனர்
இந்நிலையில் இந்த கோவில்களுக்கு புதிய கோபுரங்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி ஸ்ரீ லட்சுமி விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு ஆலயத்தில் புதிதாக நிறுவப்பட்டது
பின்னர் மூன்று நாட்கள் நடைபெற்ற யாக வேள்வி பூஜைகளை தொடர்ந்து, பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கோபுர கலசங்கள் மீது ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ஆலய திருப்பணி மற்றும் குடமுழுக்கு ஏற்பாடுகளை கல்யாண சுந்தரம், முத்துப்பாண்டி, முத்துராமலிங்கம், பாண்டி மற்றும் திருப்பணி குழுவினர் மற்றும் முதன்மை காரர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். குடமுழுக்கு விழாவையொட்டி வத்தலக்குண்டு பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.






