மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த திருவிழா: 31-ந் தேதி தொடங்குகிறது


மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த திருவிழா: 31-ந் தேதி தொடங்குகிறது
x

வசந்த திருவிழாவையொட்டி தினமும் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து புதுமண்டபம் செல்வார்கள்.

மதுரை,

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதன்படி வைகாசி வசந்த திருவிழா வருகிற 31-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 9-ந் தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மீனாட்சி-சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு புதுமண்டபம் செல்வார்கள்.

அங்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். அதன்பின்னர் அங்கிருந்து புறப்பட்டு நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்து கோவிலுக்குள் செல்வார்கள். 10-ம் நாள் விழாவில் மீனாட்சி-சுந்தரேசுவரர் பகலில் புதுமண்டபத்தில் எழுந்தருளி அங்கு பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். பின்னர் மாலையில் அபிஷேகம், தீபாராதனை முடிந்து சித்திரை வீதிகளில் வலம் வருவர்.

மேலும் அடுத்த மாதம் 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை திருஞானசம்பந்தர் திருவிழா நடக்கிறது. அதில் 12-ந் தேதி திருஞானசம்பந்தர் நட்சத்திரத்தன்று தங்கப்பல்லக்கில் எழுந்தருளி 63 நாயன்மார்கள் நான்கு ஆவணி மூலவீதியில் வலம் வருவர். அன்று இரவு 8 மணிக்கு திருஞானசம்பந்தர் சுவாமிகள் வெள்ளி கோரதத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் வைகாசி வசந்த உற்சவத்தையொட்டி வருகிற 31-ந் தேதி முதல் அடுத்த மாதம் 12-ந் தேதி வரை கோவில் சார்பில் திருக்கல்யாணம், தங்கரதம் உலா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படமாட்டாது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story