உடன்குடி கனக துர்கை அம்மன் கோவில் கொடை விழா


உடன்குடி கனக துர்கை அம்மன் கோவில் கொடை விழா
x

திருவிழாவின் முதல் நாள் இரவு திருவிளக்கு பூஜையும், மாக்காப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

உடன்குடி கனக துர்கை அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. விழாவின் முதல் நாள் இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 11.45 மணிக்கு மாக்காப்பு தீபாராதனையும், கும்பம் திருவீதி உலாவும் நடந்தது.

இரண்டாவது நாள் காலை 7 மணிக்கு கண்டு கொண்ட விநாயகர் கோவிலில் இருந்து பால் குடம் எடுத்து திருவீதி உலா, காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், துர்கா ஹோமத்தைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6 மணிக்கு படக் கஞ்சி தீபாராதனை, இரவு 11.45 மணிக்கு சந்தனக் காப்பு அலங்காரம், தீபாராதனை கும்பம் வீதி உலா நடந்தது. மூன்றாவது நாள் மதியம் 12.30 மணிக்கு கும்பம் திரு வீதி உலாவும் தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழாவும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story