திருவண்ணாமலை: கார்த்திகை மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய் ஆவினில் கொள்முதல்


திருவண்ணாமலை: கார்த்திகை மகா தீபம் ஏற்ற 4,500 கிலோ நெய் ஆவினில் கொள்முதல்
x

கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) துர்க்கையம்மன் உற்சவத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (டிசம்பர்) 7-ந் தேதி வரை நடைபெறவுள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெறும் இவ்விழாவின் சிகர நிகழ்ச்சி வருகிற டிசம்பர் மாதம் 3-ந் தேதி நடக்கிறது. அன்று காலையில் பரணி தீபமும், மாலையில் கோவில் பின்புறம் உள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. பின்னர் இரவு பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற உள்ளது.

இந்த ஆண்டு தீபத் திருவிழாவின்போது சுமார் 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம் மற்றும் காவல் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், மகா தீபத்திற்கு நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களின் வசதிக்காக அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகம் அருகில் சிறப்பு பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது. மகா தீபம் ஏற்றுவதற்காக திருவண்ணாமலை ஆவின் நிறுவனத்திடம் இருந்து 4,500 கிலோ முதல்தர நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இந்த நெய் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அருகில் உள்ள திட்டி வாசல் பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது.

1 More update

Next Story