கேண்டீன்களில் பக்தர்களுக்கு தரமான உணவுப்பொருட்களை வழங்க வேண்டும்: திருப்பதி தேவஸ்தானம் உத்தரவு

கேண்டீன்களில் பக்தர்களுக்கு தரமான உணவுப்பொருட்களை வழங்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளது.
திருமலை,
திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக கூட்ட அரங்கில் அங்கீகாரம் பெற்ற ஓட்டல் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஷியாமளா ராவ் பங்கேற்று ஓட்டல் நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி பேசினார்.
அவர் பேசியதாவது:-
உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வருவதால், அவர்களுக்கு நியமிக்கப்பட்ட விலையில் தரமான, சுத்தமான உணவுப் பொருட்களை லாப நோக்கமின்றி வழங்க வேண்டும். திருமலையில் ஜனதா கேண்டீன்கள் நடத்துவதற்கான அறிவிப்பு கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அதனுடன் தொடர்புடைய சந்தேகங்களை தீர்க்கும் வகையில் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. ஜனதா கேண்டீன்கள் நிர்வாகத்தில் தரநிலைகள், சுத்தம் மிகவும் அவசியம். மேலும் நியமிக்கப்பட்ட விலையில் உணவுகள் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story