கார்த்திகை பிரம்மோற்சவம்... முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா


வாகன சேவையில் திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சிறிய ஜீயர் சுவாமிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தாயாரை தரிசனம் செய்தனர்.

திருப்பதியை அடுத்த திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 2-ம் நாளான நேற்று காலை 8 மணி முதல் 10 மணி வரை பெரிய சேஷ வாகனத்தில் பரமபத வைத்தியநாதர் அலங்காரத்தில் பத்மாவதி தாயார் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணி முதல் 9 மணி வரை ஹம்ச வாகன வீதிஉலா நடந்தது.

மூன்றாம் நாளான இன்று காலையில் காலை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார், தனலட்சுமி தேவி வேடத்தில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருமலை பெரிய ஜீயர் சுவாமிகள், சிறிய ஜீயர் சுவாமிகள், திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால், இணை நிர்வாக அதிகாரி வீரபிரம்மம், கோவில் துணை நிர்வாக அதிகாரி ஹரீந்திரநாத், தலைமை அர்ச்சகர் பாபு சுவாமி, அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் வாகன சேவையில் பங்கேற்று தாயாரை தரிசனம் செய்தனர். இன்று இரவு சிம்ம வாகன வீதி உலா நடைபெறுகிறது.

1 More update

Next Story