தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை விழா: சொக்கப்பனை கொளுத்தப்பட்டது


தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை விழா: சொக்கப்பனை கொளுத்தப்பட்டது
x

தூத்துக்குடி தெப்பக்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நடந்தது.

தூத்துக்குடி

தூத்துக்குடி தெப்பக்குளம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு மாரியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை நடந்தது. கோவில் முழுவதும் திருக்கார்த்திகை திருவிளக்கு ஏற்றப்பட்டது. அதன் பின்பு கோவில் வாசல் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா அறிவழகன், அறங்காவலர்கள் மகாராஜன், பாலகுருசாமி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை கோவில் பிரதான பட்டர்கள் சிவா மற்றும் குரு ஆகியோர் செய்திருந்தனர்.

1 More update

Next Story