ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம்... பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு


ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்  சித்திரை தேரோட்டம்... பக்தி பரவசத்துடன் பக்தர்கள் வழிபாடு
x

‘கோவிந்தா’ முழக்கத்துடன் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

திருச்சி,

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனங்களில் காலை மற்றும் மாலை நேரங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

விழாவின் 7-ம் நாளான வியாழக்கிழமை, மாலை 6.30 மணியளவில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருச்சிவிகையில் புறப்பட்டு வந்து நெல்லளவு கண்டருளினார்.8-ம் நாளான நேற்று காலை வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று காலை 6.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் 'கோவிந்தா'ரங்கா... ரங்கா... என்ற முழக்கத்துடன் பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர்.

1 More update

Next Story