திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மே மாத சிறப்பு உற்சவங்கள்


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மே மாத சிறப்பு உற்சவங்கள்
x

திருச்சானூர் வசந்தோற்சவத்தின் ஒரு பகுதியாக 12-ந்தேதி தங்கத் தேரோட்டம் நடைபெறுகிறது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குட்பட்ட திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் மே மாதம் நடக்கும் சிறப்பு உற்சவங்கள் குறித்து தேவஸ்தானம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

மே மாதம் 2, 9, 16, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு திருச்சி உற்சவம், 6-ந்தேதி காலை 6 மணிக்கு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம், 10-ந்தேதி பத்மாவதி தாயாருக்கான வசந்தோற்சவ அங்குரார்ப்பணம், 11 முதல் 13-ந்தேதி வரை வசந்தோற்சவம், 12-ந்தேதி வசந்தோற்சவத்தின் ஒரு பகுதியாக காலை 9.45 மணிக்கு தாயார் தங்கத்தேரில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

18-ந்தேதி உத்திராட நட்சத்திரத்தையொட்டி மாலை 6.45 மணிக்கு தாயார் கஜ வாகனத்தில் கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

அதேபோல் பலராமகிருஷ்ணசாமி கோவிலில் 27-ந் தேதி ரோகிணி நட்சத்திரத்தையொட்டி மாலை 6 மணிக்கு கிருஷ்ணருக்கு திருச்சி உற்சவம் நடக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story