புன்னக்காயல் ஆலய திருவிழா: புனித சவேரியார் கப்பல் சப்பர பவனி


புன்னக்காயல் ஆலய திருவிழா: புனித சவேரியார் கப்பல் சப்பர பவனி
x

புன்னக்காயல் புனித சவேரியார் ஆலய திருவிழாவில் கப்பல் சப்பர பவனி.

தினத்தந்தி 4 Dec 2025 11:09 AM IST (Updated: 4 Dec 2025 11:49 AM IST)
t-max-icont-min-icon

சப்பர பவனியின்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வழிபாடு நடத்தினர்.

தூத்துக்குடி

புன்னக்காயலில் பழமை வாய்ந்த புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேர்ந்தபூமங்கலம் பங்குத்தந்தை ராயப்பன் அடிகளார் கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார். இதில் புன்னக்காயல் பங்குத்தந்தை அந்தோணி சகாயம், துணை பங்குச்சந்தை ஜெரால்டு அடிகளார் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து 13 நாட்கள் காலையில் திருப்பலியும் மாலையில் ஆராதனை, மறையுரை, நற்கருணை ஆசீர் நடந்து வந்தது.

கப்பல் சப்பரபவனி

நேற்று முன்தினம் மாலையில் மேட்ரிமோனி தின விழாவையொட்டி மாலை ஆராதனையை தூத்துக்குடி சன் தாமஸ் பள்ளி தாளாளர் அமலன் அடிகளார் நிறைவேற்றினார். அன்று இரவு புனித சவேரியார் கப்பல் சப்பர பவனி நடந்தது.

நேற்று காலையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியை தூத்துக்குடி செயின்ட் தாமஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி தாளாளர் ஜேசுராஜா அடிகளார் நிறைவேற்றினார். தொடர்ந்து புனித சவேரியார் சொரூபம் தாங்கிய கப்பல் சப்பர பவனி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினர். திருவிழா ஏற்பாடுகளை ஊர் கமிட்டி தலைவர் குழந்தைசாமி மஜ்ஜாது மற்றும் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

ஆறுமுகநேரி

ஆறுமுகநேரி புனித சவேரியார் ஆலய திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் ஆராதனை, மறையுறை, நற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்றன.

நேற்று முன்தினம் மாலையில் அமலிபுரம் பங்கு தந்தை வில்லியம் சந்தானம் அடிகளார் ஆராதனையை நடத்தினார். நேற்று காலையில் திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதை தூத்துக்குடி புனித பனிமயமாதா ஆலய அதிபர் தந்தை ஸ்டார்வின் அடிகளார் தலைமையேற்று நடத்தினார். திருச்சி குருத்துவ கல்லூரி பேராசிரியர் டெரன்ஸ் அடிகளார் மறையரை நிகழ்த்தினார். இதில் அடைக்கலாபுரம் புனித சூசை அறநிலைய இயக்குனர் தந்தை புரொமில்டன் அடிகளார், செட்ரீக் பீரிஸ் அடிகளார், திருச்சி ஜெயங்கொண்டான் திருமலை, பங்குத்தந்த டேவிட்ராஜ் அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டு திருப்பலி நிறைவேற்றினர். மாலையில் ஆராதனையை தொடர்ந்து புனித சவேரியார் சொரூபம் தாங்கிய கப்பல் சப்பர பவனி நடைபெற்றது. திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தை டேவிட் சகாய வளன் அடிகளார், ஊர் தலைவர் பி. செல்வம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

1 More update

Next Story