புதுவை அரியாங்குப்பம் ஆரோக்கிய அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றம்

விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.
புதுச்சேரி அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தின், 335ம் ஆண்டு பெருவிழா இன்று தொடங்கியது. இதையொட்டி காலை 6:00 மணிக்கு சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. பகண்டை மிஷன் குருத்துவ பொன்விழா நாயகர் ஜான் போஸ்கோ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு திருப்பலி நடத்தினார். அரியாங்குப்பம் பங்குத்தந்தை அருள்தாஸ் தலைமை தாங்கினார். திருப்பலி நிறைவடைந்ததும், கொடிக்கு சிறப்பு ஆராதனை நடத்தி பங்கு மக்கள் மத்தியில் கொடி ஊர்வலம் வந்து கொடியேற்றம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கு நிர்வாக குழு, தன்னார்வலர்கள் குழு, அருட்சகோதரிகள், அரியாங்குப்பம் பங்கு மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விழா நாட்களில் ஆலயத்தில் தினமும் திருப்பலி மற்றும் தேர்பவனி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 14-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலையில் பெருவிழா திருப்பலி, மாலையில் ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.