சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு: திரளான பக்தர்கள் தரிசனம்

பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.
விருதுநகர்,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் அதிகாலை முதல் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு குவிந்தனர்.
காலை 6 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்களின் உடைமைகளை தீவிர சோதனை செய்தனர். பின்னர் வனத்துறையினர் பக்தர்கள் மலையேறி செல்ல அனுமதித்தனர்.
சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story