திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தொடக்கம்

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக திருவண்ணாமலை விளங்குகிறது. இங்கு கிரிவலம் வந்து வழிபடுவது மிக முக்கியமான வழிபாடாக உள்ளது.
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம்.
அந்த வகையில் பங்குனி மாதத்திற்கான பவுர்ணமி தினமான இன்று கிரிவலம் செல்ல அதிகாலை 4.15 மணிக்கு (இன்று 12ம் தேதி) தொடங்கி நாளை அதிகாலை 6.08 மணிவரை உகந்த நேரம் என்று கோவில் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், பவுர்ணமி தினத்தையொட்டி திருவண்ணாமலையில் கிரிவலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர். கிரிவலத்தையொட்டி திருவண்ணாமலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.