நொய்யல்: விநாயகர் கோவில்களில் சதுர்த்தி வழிபாடு

சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் உள்ள வருண கணபதி ஆலயத்தில் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விநாயகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் சேமங்கி, மரவாபாளையம், நொய்யல், குறுக்கு சாலை அண்ணாநகர், அத்திப்பாளையம், உப்புப்பாளையம், நத்தமேடு, குந்தாணி பாளையம், வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம். ஒரம்புப்பாளையம், காளிபாளையம், நல்லிக் கோவில், புன்னம் சத்திரம், புன்னம், மூலிமங்கலம், காகிதபுரம், நடையனூர், கோம்புப்பாளையம், திருக்காடுதுறை, தவுட்டுப்பாளையம், நன்செய் புகளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விநாயகர் கோவில்களில் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகப் பெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.






