தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா


தேவகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா
x

பூத்தட்டு ஊர்வலம் கோவிலை அடைந்ததும், அம்மனுக்கு மலர்களால் அபிஷேகம் நடைபெற்றது.

சிவகங்கை

தேவகோட்டை ஸ்ரீரெங்கபுரம் அருணகிரிபட்டினத்தில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி உற்சவ விழா சிறப்பாக நடைபெறும். அவ்வகையில் 118-ம் ஆண்டு ஆடி உற்சவ விழா, கடந்த மாதம் 29-ம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை நேரத்தில் சத்திரத்தார் ஊரணியில் இருந்து சக்தி கரகம் எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து கோவில் வந்தடையும்.

வெள்ளி அங்கி திரு அலங்காரம், தேவி கருமாரியம்மன், ராஜராஜேஸ்வரி, மகாலட்சுமி, இந்திராணி, காமாட்சி போன்ற அலங்காரத்தில் அம்மன் காட்சி தருகிறார்.

நேற்று இரவு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. சிலம்பணி விநாயகர் கோவில் இருந்து சுமார் 5000 பூத்தட்டுகளை சுமந்தபடி பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். தியாகிகள் சாலை, நகைக் கடை வீதி, கருதாவூரணி, கண்டதேவி ரோடு வழியாக வந்த இந்த ஊர்வலம் கோவிலை அடைந்ததும், அம்மனுக்கு மலர்களால் அபிஷேகம் நடைபெற்றது.

இன்று இரவு சக்தி கரகம் எடுத்தல், நாளை காலை பால்குட ஊர்வலம் மற்றும் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

1 More update

Next Story