சபரிமலை தரிசனத்திற்கு புதிய கட்டுப்பாடு; தேவசம்போர்டு அதிரடி அறிவிப்பு

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. கோவிலில் கடந்த 3 நாட்களில் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். கடுமையான குளிரையும், இடை இடையே கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
இதனிடையே, சபரிமலை அய்யப்பன் கோவிலில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கோவிலில் தரிசனத்திற்கான கட்டுப்பாடுகளை தேவசம்போர்டு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஸ்பார்ட் புக்கிங் முறையில் தினமும் 20 ஆயிரம் பேர் வரை தினமும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அந்த நடைமுறையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சபரிமலையில் கூட்டத்தை கட்டுப்படுத்த வரும் 24ம் தேதி வரை ஸ்பார்ட் புக்கிங் முறையில் தினமும் 5 ஆயிரம் பேர் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.






