திருமண தடை நீக்கும் நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர்


திருமண தடை நீக்கும் நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர்
x

சித்தர் ஜீவ சமாதி அடைந்ததை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சித்தர் பெருமானுக்கு குருபூஜை விழா நடத்தப்படும்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் சந்தைமேட்டில் நஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவில் ஆவுடையார் கோவில் என முன்னர் அழைக்கப்பட்டது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலை பகுதியில் இருந்து வந்த சித்தர் ஒருவர், பல ஆண்டு காலம் இங்கு தங்கி சிவனுக்கு பூஜைகள் செய்து, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.

அப்போது கோவில் வளாகத்திற்குள் வரும் நாக பாம்பின் நஞ்சை தனது கையில் வாங்கி உண்டு வந்துள்ளார். இதனால் அந்த சித்தர் 'நஞ்சுண்ட ஞான தேசிகர்' என அழைக்கப்பட்டார். ஒருநாள், சித்தர் பெருமான் கோவிலில் மூலவருக்கு அருகில் ஜீவசமாதி அடைவதாக பக்தர்களிடம் கூறிவிட்டு ஜீவ சமாதி அடைந்தார். அதன்பிறகு ஆவுடையார் கோவில், 'நஞ்சுண்ட ஞான தேசிகர் கோவில்' என அழைக்கப்படுகிறது.

இந்த கோவிலில் சித்தர் ஞான தேசிகருக்கு பவுர்ணமி பூஜை நடைபெறும். மேலும் சித்தர் ஜீவ சமாதி அடைந்ததை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் சுவாதி நட்சத்திர நாளில் சித்தர் பெருமானுக்கு குருபூஜை விழா வெகு விமரிசையாக நடத்தப்படும்.

இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் சிவபெருமானையும், சித்தரையும் வழிபடும் பக்தர்களுக்கு திருமண தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

1 More update

Next Story