நாகை: ஆஞ்சநேயர் கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு


நாகை: ஆஞ்சநேயர் கோவில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடு
x

அமாவாசையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் அந்தந்த பகுதி பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாகப்பட்டினம்

நாகை மாவட்டம் தலைஞாயிறு அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் வைராக்கிய ஆஞ்சநேயருக்கு கார்த்திகை மாத அமாவசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், தேன் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று வண்ணமலர்களால் ஆஞ்சநேயர் அலங்கரிக்கப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல் ஓரடியம்புலம் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கும் ராம பக்த விஸ்வரூப ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வண்ண மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது. தகட்டூர் பைரவர் கோவிலில் தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயருக்கும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

1 More update

Next Story