அச்சரப்பாக்கம் ஐயப்ப சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்


அச்சரப்பாக்கம் ஐயப்ப சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்
x

கும்பாபிஷேக விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் வஜ்ரகிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது ஐயப்ப சவாமி ஆலயம். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஆலயத்தில் பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இக்கோவிலில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. அதன்படி திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்ட நிலையில், கும்பாபிஷேக விழா தொடங்கியது.

இதையொட்டி ஐயப்ப சுவாமி மற்றும் பெரிய கருப்பண்ணசாமி, சிறிய கருப்பண்ணசாமி, மாளிகைபுரத்தம்மன், துர்கா தேவி, விநாயகர், முருகன், நவகிரகம் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக பூஜை நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் பதினெட்டாம் படி வழியாக ஏறி கொடி மரம் மற்றும் மூலவர் விமானத்தின் மீதுள்ள கலசத்தில் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர்.

இவ்விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு ஸ்ரீ ஐயப்பா அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாட்டினை ஸ்ரீ ஐயப்பா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

1 More update

Next Story