சாயல்குடி அருகே உய்ய வந்த அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
ராமநாதபுரம்
சாயல்குடி அருகே மேலக் கிடாரம் கிராமத்தில் உள்ள ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான நிர்வாகத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ உய்ய வந்த அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி, ஹோமம், மகாலட்சுமி பூஜை, நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
யாகசாலை பூஜைகள் இன்று நிறைவடைந்த நிலையில் கடம் புறப்பாடு நடைபெற்று, மூலவர் உய்ய வந்த அம்மன் கோவில் கும்பத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மூலவர் உய்ய வந்த அம்மனுக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 21 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story






